Monday, November 2, 2009

post from vijaylakshmi

 :எஙக ஊர் குலதெய்வம.    எழுதியவர்  திருமதி. விஜயலட்சுமி ராமசந்திரன்

நாகப்பட்டினம் வடக்கே திருவாரூர் தெற்கே அப்படி இரண்டுக்கும் நடுவே
உள்ள குருமாணாங்குடியில் எங்க குலதெய்வம் காத்தவராயன், அந்த ஊர்
மாரியம்மன்கோவிலில் தனி சன்னதியில் தன்னோட இரு சக்திகளுடன் காட்சி தருகிறார்எனக்கு கல்யாணமான புதிதில் குலதெய்வத்தை பற்றித்தெரிந்து கொள்ள ஏனோஅத்தனை ஆர்வமில்லாமல் இருந்ததது, காரணம் எங்கள் பெரியகுளம் வீட்டில்
குலதெய்வம் பிரார்த்தனை என்று அறிந்ததில்லை ,

 அப்பா விசாகப்பட்டினம்வந்திருந்தபோது என்னோட மாம்னார் அப்பாவிடம் தங்கள் ஊர் குலதெய்வம் பற்றிப்பேசிகொண்டு காத்தவராய சுவாமியின் மகிமை பற்றி விவரித்த அந்த சமயம்எனக்கு எங்கள் குலதெய்வத்தை பார்க்க ஆவல் கூடிப்போயிற்று , அப்பாகிட்டஏன் நம்மாத்தில் இப்படி குலதெய்வமெல்லாம் கிடையாதா என்று கேட்டஅதற்கு அப்பா பெரியகுளத்தில் இருக்கற நிறைய வீடு எங்க மூதாதையருக்குசசொந்தமென்று இருந்தது அது மாதிரி அங்க உள்ள எல்லாக்கோவிலும் குலதெய்வந்தான், எங்களுக்கு,, ஊர் எல்லை அளவிடுவதற்கு அந்த கால்த்தில் ஊர்எல்லைக்கு ஓரு கோவில் என்று கட்டுவார்கள்,அதுக்கு கட்டுப்பட்டு ஊர் ஜனமும்அந்த தெய்வ்த்தை அந்த அந்த ஊர் குலதெய்வம் என்று வணங்குவார்க்ள்எங்கள் ஊருல நாலு பக்கமும் சிவன் விஷ்ணு என்று கோவில் இருக்குஅந்த காலத்துல என்னோட அம்மா அப்பா ப்ரத்யேகமாக ஒர் குலதெய்வமென்றுகும்பிடாவிட்டாலும் எங்காத்தில பிள்ளையாருக்குத்தான் பூஜைன்னார்.

என்னோட மாம்னார் அவரோட அப்பா தன்னோட மூதாதையர்
வாழ்ந்த வீட்டில் தன்னோட ஒரே பெண் மற்றும் நான்கு பிள்ளைகளோடு
குடித்தனம் செய்தார், தன்னோட மனைவியின் இழப்பிற்க்கு பிறகு.,கூடபிறந்த
அக்கா பையனின் நிலம் மற்றும் சொத்துக்களை கவனமாக பார்த்து ஒரு நல்ல
நிர்வாகியாக தன்னோட குடும்பத்தையும் பார்த்துக்கொள்வாராம், நெல் கறிகாய்க்கு
குறைவில்லாம்ல் மற்றும் பணத்தட்டுபாடில்லாமல்,, என் மாமனாரின் அப்பா
அவர்கள்நிலத்திலேயே எங்கள் குல்தெய்வம் இருந்ததாம், பிற்காலம் குறுமணாங்குடி
மாரியம்மன் ஆலயத்துக்கு கொண்டு வ்ந்ததாக் சொல்வார்கள்,என் மாமனாரின் அப்பா ராமச்சந்திரய்யர் சிறந்த தெய்வபக்தர்வீட்டின் பின்புறம் உள்ள காத்தவராயனை நேரில் தரிசனம் செய்தவர்என் மாமனார் வேலைக்கு டவுன் சைடுக்குப்போக வயல்களை தாண்டிசெல்ல வேண்டுமாம் சில சமயம் இரவு ஆகிவிடுமாம் அவரோட அப்பாவைத்தி “வரும்போது திரும்பிப்பார்க்காம் வாடா உன்னோட துணைக்குகாத்தவராயன் வருவான் என்பாராம்,” ;காத்தவ்ராயன் படையல் போடறேன்என்று வேண்டிக்கொள்வார்களாம் , அந்த படையலில் பிராமணாள் பார்க்க
கூடாது , மாமிசமும் சாராய்மும் படைத்து கொண்டாடுவார்க்ள்

காத்தவராய்ன் சுவாமி முதன்முறையாக நான் பார்க்கப்போனபோது பகல்
காரில் மாயவரம் வ்ழியாகசென்றோம், ஊர் நெருங்கும் சமயத்தில்
வயக்காட்டில் நான் ஒரு நிழல் உருவ்ம் கண்டேன் அதன் கையில்
ஒரு தண்டம் அதாவது முருகன் கையில் இருப்பது போல்இருந்தது
கோவிலில் நான் கண்ட காத்தவ்ராய்னும் அதேபோல் இருக்கவே
எல்லை இல்லா மகிழ்ச்சி எனக்குஎங்கள்மூதாதையர்பரம்பரையைச்சேர்ந்தஒருவரின் அம்மா என்னைப்போல் காத்தவராயன் தரிசனம் கண்டார்கள் என்று கூறுவார்கள், இன்றும் எனக்கு மறக்கமுடியாத காட்சி நம்பாதவர்களையும் தெய்வம் என்றும் நம்பவைக்கும்எனக்கு அந்த நம்பிக்கை உண்டு, ஆதார்ம் சொல்ல அவரவர்கள்
அநுபவத்திற்கு காத்திருங்க்ள் என்று மட்டுமே சொல்லிக்கொள்வேன்,

என் மாமனார் இறந்த பிறகு வீடு விற்கப்பட்டபோது வீட்டின் பின்னே
உள்ள காத்தவ்ராயனுக்கு பூஜாரி உடுக்கைஅடித்து படையல் போட்டு கேட்க குருமணாங்குடி மாரிய்ம்மன் கோவிலில்குடி இருக்க விருப்பம் தெரிவித்து அங்கே பிர்திஷ்டை செய்யப்பட்டதாகசொல்வார்க்ள், இன்றும் அங்கே சென்றால் என் பிரார்த்தனை யாவும்நிறைவேறும். ,அங்கே உள்ள மற்ற தெய்வங்கள் மாரியம்மன் பேச்சியம்மாமுருக்ன் பிள்ளையார், அங்கே உள்ள குளம் அல்லிபூக்கள் பூத்து குலுங்கும்செம்பருத்தி செடி புஷ்பவாரிதான் அம்மன் பூஜைக்கு காத்துகொண்டு,இருக்கும்அமைதியான் அழகான இடம் குருமணாங்குடி தக்ஷ்ணாமூர்த்தி அவதாரமாகமுதல்முதலாக சிவன் அமர்ந்த இடம் இன்றும் பெரியகோவில் உள்ளது, சிறந்த குரு ஸ்தல்ம் என்று சொல்லலாம்.

என் மாமனாரின் தாத்தா வீடு மண்வீடு இன்றும் பார்க்கலாம், என் மாமனாரின்
சிறுவயது அநுபவங்கள் அவர் சொல்ல நான் கேட்டு இருக்கேன், அங்கே
அவற்றை அங்கே நினைவுக்கு கொண்டுவந்து என்னைச்சிரிக்க வைப்பவையாகஇருக்கும். குரு என்றால் தக்ஷ்ணாமூர்த்தி அணங்கு என்றால் அமர்நத குடி என்றால்கோவில் இப்படி அழைக்கப்படும் பெருமை கொண்ட ஊர் குருமணாங்குடி















,

4 comments:

  1. padikkarathukku nanna irundhadhu perima :)

    ReplyDelete
  2. தமிழில் டைப் செய்ததற்காக ஒரு இச்!!
    நன்னா எழுதிர்க்கேள்!!
    வந்தனா.....

    ReplyDelete
  3. I gave her instructions thru skype to setup the tamil font. She installed and did everything by herself. She figured all the tamil leters by herself. What can I say about her talent and fluency in TAMIL... She is the MOST talented but never got a chance to showcase it.

    Also, I just figured that my TAMIL reading level has improved from KG level to SECOND GRADE.

    ReplyDelete