Thursday, November 5, 2009

Tiruvannamalaiyum Perungaya Vyaparium.

This is a post by viji  ramachandran.
It is about her experience with a  fellow traveller during her visit to
Tiruvannamalai. An interesting  reading.
Her narration is an envy for me.
=========================================================================




நான் எங்கள்  பிரயாணத்தின்போது, சந்தித்த கிற்ஸ்த்தவர் பெருங்காயவியாபாரி.
அவரோட மனைவி மகனுடன் எங்களைத் தொடர்ந்து மதுரை வந்தார். பேசிக்கொண்டுவருகையில், அவர் ஒரு எழுத்தாளரும் கூட எனத்தெரிந்துகொண்டோம், ஒருவரைப்பற்றி மற்றவர் அறிமுக்ம் ஆனபின்பு சம்பாஷணை தொடர்நதது பெருங்காயத்தை டைரக்டாக எண்ணெயில் போட்டு பொரித்தால் அதன் மணம் குணம் மாறிவிடுமா மற்றும் கலப்படம் இருந்தால் கண்டுபிடிப்பது எப்படி என்று கேட்டுத்தெரிந்து கொண்டோம். பிசின் கலந்து செய்தால் தெரிந்துவிடும், எண்ணெயில் போட்டுப்பொரித்தால்
மணம் குணம் மாறாது என்று சொல்லி என்னோட கேள்விக்ளுக்கு பாராட்டு
தெரிவித்தார், அவரோட கதைக்ள் நிறைய குங்குமம், குமுதம், இன்னும் பல
பத்திரிகைக்ளில் வந்து இருப்பதாகசொன்னார், ஆன்மீகமும் கோவில்களை
பற்றியும் எழுதியதை தெரிவித்தார், என்னிடம், அவரோட விலாசம் பெயர்
இருந்தது தொலைத்துவிட்டேன், எங்கள் மதம் பற்றிய குறிப்பு    எப்படி எழுதுவீர்கள்
என்ற கேட்டதற்கு பிறகு அவ்ர் சொன்னது என்னைஆச்சரியத்தில் ஆழ்த்திய்து,. நான் பிறப்பால் கிறிஸ்தவ்ன் என் மதத்தைப்பற்றி எவ்வ்ள்வு தெரிந்து கொண்டு செயல்படுகிறேனோ  அத்தனைக்கு பிறமதங்களும் என்னை அப்படி கவர்ந்தனவைதான்,என்றார்,என்றதோடு ஒரு ஹிந்து அன்பரிடம் தேவாரம், திருவாசகம் ஆதித்யஹ்ருதயம்கற்றுக்கொண்டு அவற்றை பாடிக்காட்டினார், நான் எனக்குதெரிந்த விஷயங்களில் கொஞ்சத்தை செலவழிக்க மனதில் நிச்சயம் செய்து கொண்டடேன், ஆனாலும் 3 வ்ருடங்க்ள் கான்வெண்ட்டில் படித்த அநுபவத்தால் சில கிறித்தவ பாடல்களை பாடி
பரவாயில்லையே என்று அவ்ர் சொன்னவுடன் எங்களுக்கும் பிற மத நம்பிக்கை
உண்டு என்று காட்டிக்கொண்ட த்ருப்தி, எனக்கு .அவர் அவரோட இன்னொரு ரூபமென தன்னோட தமிழ் இலக்கியத்திறமை காட்டினார். நான் தாறு மாறா இலக்கியம் கிழிப்பதை சரி செய்தார். ,பொழுதை போக்க இலக்கியம் யூஸானது

அவர் சென்ற பல கோவில்கள் யாத்திரை அவருக்குப்பல அனுபவங்களை
தந்துள்ளது, அதில் திருவண்ணமலை அற்புதங்க்ள் பற்றி கேள்விப்பட்டு
அங்கே அவரும் அவரோட நண்பரும் மலைமேல் சென்று பார்த்து அங்கே
அப்படி என்ன் அற்புதங்க்ள் என்று ஆராயமுற்ப்பட்டதை அவர் விவரிக்கும்போது
வியர்த்தது எங்களுக்கு,, அவ்ர் திருவ்ண்ணாம்லையை தலமாக பார்த்தேன் ஆனால்
அனுபவ்த்திற்கு பிறகு மலையே தெய்வம் என்று உணர்ந்துகொண்டேன் என்றார்

நான் எனக்கு என் அம்மா கொடுத்த ரமணரின் சிஷ்யரான குஞ்சு சுவாமி
புத்தகத்தில் வந்த சில விஷயங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்

ஒருநாள்ஸ்ரீபகவான் ரமண்ர் மலையில் விருபாக்ஷ குகையில் இருக்கும்போது
விழிப்பும் சொப்பனமும் இரணடுமில்லாத ஒரு நிலையில் தான் மலையில்
ஓரிடத்தில் உள்ள ஒரு குகையில் ஒன்றினுள் நுழைந்து செல்ல அங்கே
சாலை மற்றும் பர்ணசாலைகளும் குளங்க்ளும் பூத்து குலுங்கும் மரம் செடி
கொடிக்ளுமாக அதி அற்புத காட்சியை கண்டாராம், ஏற்கன்வே ரமணருக்கு
அவை பழகிய இடங்களாக காட்சி அளித்தவை என்றவாக உணர்ந்தாராம்.

1915 வருஷம் அடி அண்ணாமலைக்கோவிலை திருப்பணி செய்தபோது
கோவிலில் கிழக்கு பகுதியில் ஒரு சுரங்கம் செல்வ்தை கண்டனராம்.
இந்த்செய்தியை பகவான் ரமணரிடம் தெரிவித்தார்கள் ,மறுநாள்
பகவான் ரமணர் கிரி ப்ரதக்ஷ்ணம் வரும்போது அச்சுரங்க்த்தை பார்த்து
தான் கண்ட காக்ஷி அப்படியே அச்சுரங்க்த்தில் பார்த்தாராம் அதை உட்னே
மூடி விட சொன்னாராம், யாரும் சுரங்த்தை சோத்னை செய்ய்கூடாதெனக்கூறினார்

அதே போல அண்ணாமலையின் இன்னொரு அதிசயம் ரமணர் மலையின் வடக்குப்பகுதியில்கண்டாராம், பெரிய ஆலிலை அதைப்பார்த்தபின்பு பக்கத்தில் ஒரு பெரிய வட ஆலவிருக்ஷம் ராக்ஷசத்தனமாக வளர்ந்து இருப்பதை பார்த்த சில நேரத்தில் பெரிய அளவிலான குளவிகள் ரமணரின் கால்களைக்கொட்டி துன்புறுத்தியதால், அற்புதங்கள் உள்ள இந்த இடத்தில்நான் குளவிகளை தொந்திரவு செய்துவிட்டேன் என்று வலியை பொறுத்துக் கொண்டுதான் தங்கி உள்ள விருபாக்ஷகுகை வந்து சேர்ந்தாரம் .

,குஞ்சு சுவாமிக்ள் .  வட ஆலவிருக்ஷ்த்தை பார்க்க ரமணர் அனும்தி
 இன்றிசென்றார். தடை சொல்வார் எனக்கருதி அங்கே சென்று பின்பு பலவித தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்வார்கள். ரமணரிடம் அவரகள் வட ஆல விருக்ஷ்ம் பார்க்காமல் பாதி வழி திரும்பியதை சொல்லி
இனி தவறுசெய்யமாட்டோம் என்று மன்னிப்ப்பு கேட்டார்களாம், அருணாச்சலம்
 என்பதுசித்தர்கள்பூமி மற்றும் அழலாக(நெருப்பு) அருணாசலம் சத்தியமாய்
சிவமாய் வீற்றிருக்கிறார்

எங்களுடன் வந்த பெருங்காயவியாபாரி கண்ட காட்சி. மலை வலம் வரும் பாதையில்
ஒரு குழியில் இருந்து குள்ளசாமியார் வெளிவந்ததை பார்த்தாராம், கட்டைவிரலளவு
சாமியார், வேகமாக ஒரு சுற்று சுற்றி உள்ளே சென்று வெளியே வந்ததை பார்த்தாராம்
சாயங்காலம் ஒரு 6 மணிக்கு மலையில் ஜடா முடியுடன் பாறைக்கு மேலே உக்கார்ந்து
ஒரு சாமியார் இவ்ரிடம் இங்கே வராதே ஒடிப்போய்விடு என்று எச்சரித்தவுடன்
அங்கேயிருந்து புறப்பட்டவுடன் ஒரு வாரம் ஜூரம் வந்து படுத்துவிட்டாராம்

ஆனானப்பட்ட பகவான் ரமணரே தான் செய்தது தப்பு என்றுகருதினார்.
இங்கே ஏன் வந்தாய் என்று குளவிகள் தனக்கு தண்டணை கொடுத்துவிட்டதாக நினைத்தார்என்றேன்.

 ஸ்ரீ பகவான் ரமணரின் ஜெயந்தி உற்சவம் வரும் இந்த மாதம் அவரைஇப்போது நினைத்து அவரோட ஆசி பெறுகிறேன்
ரயில் சிநேகிதம் என்று என்க்கு பழக்க்ப்பட்டவர்களில் அடிக்கடி என் நினைவில்
வரும் மனிதரக்ளில் பெருங்காய வியாபாரியும் ஒருவர் ,

No comments:

Post a Comment