மன்னி நம்ம குடும்பத்தின் “மெகா ஸ்டார்”எல்லாக்கலைகளையும்
நன்றாக கற்றுக்கொண்டுவிடுவாள், முயன்றால் முடியாதது உண்டோ?
அனைவருக்கும் உதவி செய்தாள், என் குடித்தனம் மன்னியின்
கைகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது,
கரக்பூரில் மல்லிகை பூவை நீளமாக ஒற்றையாக
குழாய் போல் தொடுத்து விற்பார்கள், அனைத்து
கலைகளிலும் தேர்ந்தவர்கள் என்று பெயர் எடுத்த வங்காளிகள்
பூ தொடுக்க தெரியாதவர்கள், நம்ம ஊரில் மல்லிகை தொடுப்பதை
செண்டு கட்டுவதை மன்னி அவர்களுக்கு செய்து காட்டினாள்
ஹிந்துஸ்தானி சங்கீதம் பாடற வங்காளி பெண்ணுக்கு தம்பூர் போட்டு
அசத்தினா மன்னி, “சங்கீத பூசணி” என்று நான் மன்னியை கேலி
செய்வேன், நான் மன்னியின் முன்னால் நாட்டிய அரங்கேற்றம் செய்வேன்
ஆடல் காணீரோ ஆடுவேன், மன்னிக்கு பொழுது காணலை என்னோடு
இருக்கும்போது,
மன்னிக்கு கரக்பூரில் கிடைக்கும் அரிசி வகை பிடிக்கும்
ரொம்ப நீள மணியாக இருக்கும், பொல பொலன்னு
சாதம் ரெடிஆகும்,என்ன தான் மன்னி சாம்பார் பொடி
திரிக்க கொடுத்தாலும் அந்த ஊர் மிஷினில் சோம்பு பட்டை
வாசனை போகாமல் இருப்பதால், மன்னிக்கு சாம்பார் பொடிவாசனை
சரியான மணத்தில் வராமல் மிக்சி இல்லாமல் சின்ன உலக்கையில்
இடிப்பாள், நன்னா சமைக்கற ஆனான்னு மன்னி ஆரம்பிக்க
அதற்க்கு முன்னாடியே நான் “இன்னும்நீ கத்துக்கணும்” அதானே
நானும் மன்னியும் ஈரப்புடவையை வீடு முழுக்கச் சுற்றி நடுவில்
படுத்துக்கொள்வோம், தாழம்பூவிற்க்கு தனி மணம், வாடினாலும்
எப்பவோ தலையில் சூடிய தாழம்பூ மணம் நம்மைச்சுற்றி
மணந்து கொண்டே இருக்கும், எலிசபத் ராணியை சானலில்
பார்க்கும்போது எனக்கு மன்னி மாதிரியே தோணும்,
பக்கத்து வீட்டில் பெங்காலி ப்ராமணா அசைவம் சாப்பிடுவார்கள்
,எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது, எங்களையும் அப்படியே
நினைத்து ஒருநாள் குழம்பு கொடுக்க வந்தார்கள்,
நாங்கள் சைவத்திலும் சுத்தசைவம் என்று தெரிந்து மன்னிப்பு கேட்டார்கள்.
வேதகால ப்ராமணாள் அசைவம் சாப்பிட்டதாக சொல்வார்கள்,ராமர்அசைவம்
சாப்பிட்டதாக வாதிடுவார்கள், ராமர் சாப்பிட்டார் கிருஷ்ணர் சாப்பிட்டா
என்பார்கள், மூக்கை பொத்திக்கொண்டே நானும் மன்னியும் பேசிக்கொள்வோம்
அவாத்தில் சமையலாச்சான்னு விசாரிக்கப்போக அவர்கள் நாங்கள் எதற்க்கு
அப்படி கேட்கிறோம்னு தெரியாமல் அவா சமையலின் வாசனை எங்களை
மயக்கறதுன்னு நினத்து குழம்பு கொடுக்கவந்தார்கள், மன்னிக்கு நான்
இதை சொல்லும்போது சிரித்து சிரித்து கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது,
This is written by my sister R.vijalyalakshmi.
,தக தக தோசை ,
வட்டத்தின் விளிம்பு
அனைத்தும்
மொறு மொறுவென,
வெண்பனி துவலையாக
தேங்காய் துருவலில் ,
கடுகும் ,உளுந்தும் ,மல்லியும் ,
தாளித்த, சட்னியுடன் ,
உடன் பிறவா,சகோதரிகளாய்,
பக்குவமாய் அரைத்த சிகப்பு தக்காளியும் ,
உடன் பச்சை கொத்துமல்லியும் ,
பச்சை வாழை இலையினிலே
அம்மா அருகினிலே ,கணக்கில்லா ,
தோசைகளை
ஆசையாக, சாப்பிட்ட
அந்த இரவு வேளையிலே ,
வந்தானே, மணி அடித்து ,
குல்பிவாலா ,
இனிப்பான ,திரட்டிப்பால் குல்பியுடன்
ம்,ம்,ம்,ம்ம்....
வாழ்கையே, இனிக்குதப்பா....