இரவு ஒரு மணிக்கு காலமாகி விட்டார்கள் என்று. அதன் பிறகு யோகாவில் நாட்டம் செல்லவில்லை .
உடனே நானும் சாந்தியும் , பாப்பா சித்தி வீட்டிற்கு கிளம்பிவிட்டோம்..
இந்த செய்தி ஏற்கனவே எதிர்பார்த்தது என்றாலும் ,மனதிற்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது
.
பாப்பா சித்தியை , சித்தி என்று அழைத்தாலும் , அவர்கள் என்னுடைய அத்தை
சாவித்ரியின் பெண்களில் ஒருவர் . என்னுடைய கிருஷ்ணமுர்த்தி சித்தப்பா ,
அத்தையின் பெண் ,கமலா வை , திருமணம் செய்ததால், நாங்கள் ,கமலா சித்தி என்று கூப்பிடுவது போல , அத்தையின் பெண்களை செல்லா பெரியம்மா, பாப்பா சித்தி , பட்டு சித்தி என்று அழைப்போம்.
பாப்பா சித்தியை சிறுவயது முதலே தெரியும் என்றாலும், ,எங்கள் அனைவருக்கும்,மிகவும் பிடித்த வர்களில் அவரும் ஒருவர் .எங்களிடம் மிகவும் சகஜமாக பழகுவார் . .அவர் பேச்சில் அன்பும் ,வாத்சல்யமும் ,
நிறைய இருக்கும் . என்னிடமும் சாந்தியிடமும் பேசும்போது ,என் பேரன்
அனிருத் வரை, விசாரித்து, அறிந்து கொள்வார்,அதே போல் தான் அனைவரிடமும் ..
ஏண்டா, ராமமூர்த்தி மாமா மாதிரி வருமா , என்று பேசும்போது அடிக்கடி கூறுவார்.எங்கள் சந்தோஷத்திலும், துக்கத்திலும் , தன்னை பகிர்ந்து கொண்டவர்.
என் தங்கை ரஞ்சனி , பாப்பா சித்திக்கு , மிகவும் பிடித்தமானவள்.அவள் திருமணமாகி,சென்னையில் இருந்தபோது,அவளுக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு,அருமருந்தாக இருந்தாள்.
அம்மாவை , மாயவரம் ,திருவண்ணாமலை , முதலிய இடங்களுக்கு
கூட்டிசென்று காண்பித்தவர் . விமலா அம்மாவுக்கும் , சித்தியை ,மிகவும்
பிடிக்கும்.
ரொம்ப நாளாச்சே , சித்தியை பார்க்கணும்னு , போன , முதல்ல , எண்டா,
தினமும் இந்த வழியா தானே போறே, மேல வந்து எனனை பார்க்ககூடாதா என்று தான் ஆரம்பிபார்கள்.கொஞ்ச நேரம் கழித்து, சரி சித்தி போயிட்டுவரேன் , என்று சொன்னால் , இன்னும் கொஞ்ச நேரம் இரேன் ,என்ன அவசரம் , என்னிக்கோ ஒரு நாள் வரே , சித்த இருந்துட்டு போ ,என்பார்கள்
சித்திக்கு நல்ல நிர்வாக திறமை உண்டு .சித்தியை பார்த்து கொள்ள வேலைக்கு வரும் பெண்களுக்கு , தனக்கு பிடித்தமாதிரி ,வேலை செய்ய
கற்று கொடுத்து ,களிமண்ணை ,சிறந்த மண்பானை யாக மாற்றிவிடுவார்கள் .அவர்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள் . சாந்தி , எனனை மாதிரியே ரசமும்/ குழம்பும் நன்னா வைப்பா இவ என்று ,அவர்களை பாராட்டுவார்கள் .
சித்திக்கு முறையாக படிக்க வாய்ப்பு இருந்திருந்தால் , இன்றைக்கு பெரிய
நிர்வாக பதவியில் இருந்திருப்பார்
உறவினர்களிடம் மட்டுமல்ல ,அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்
.
பாப்பா சித்தியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் முக்கியமான ஒன்று , சகோதர ,சகோதரிகளிடத்தில் அவர் வைத்திருக்கும் அன்பு/பாசம் .
அதை கண் கூடாக பார்த்தல் தான் புரியும் .சண்டையே பாசமாக இருக்கும்,
பாசமே சண்டையாக இருக்கும் .அவர்கள் (குறிப்பாக கமலா சித்தியுடன் )
பேசுவதும், பழகுவதும் , எனக்கு ரசனையாக இருக்கும்
பாப்பா சித்தியிடம் , எனனை கவர்ந்த குணம் , ஆளுமை . அதில் அன்பும் கண்டிப்பும் ,சரியான விகிதத்தில் கலந்து இருக்கும். . பாப்பா சித்தியின்
அந்த குணம் நம்மை அன்பால் கட்டி போட்டு விடும்
.
சித்தப்பா, மிகவும் குறைவாக பேசுவார். ஆனால் நம்மை ரசிப்பார் .
இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடி .ராஜா ,வாசு, பாஸ்கர் அவர்கள்
குடும்பத்தினர் அனைவரும்,சித்திக்கு பெருமை சேர்த்தவர்கள் .
பாப்பா சித்தியின் இழப்பு ஒரு தலைமுறை இடைவெளியை உருவாக்கும்
என்று எனக்கு எண்ண தோன்றுகிறது .இது இந்த அவசர உலகத்தின் பாதிப்பு..
இந்த துக்கமான தருணத்தில் , என்னுடைய எண்ணங்களையே ,பாப்பா சித்திக்கு அஞ்சலியாக செலுத்துகிறேன் .
No comments:
Post a Comment